காற்றுப்பட்டு லேசாய் துளிர்விட்டெழும் இலைகளை
போல் என் குரல் கேட்கும் தருணம் அவள் அழகாய்
துயில் கொள்கிறாள்
குழம்பி குழம்பி குழம்பிக்கொண்டு வரும் அவளின்
குழந்தைத்தனம் என்னிடத்தில் ஏதோ சொல்ல துடிக்க
என் கட்டியணைப்பில் இருந்த தலையணையோ தடுமாறி
கீழே விழ என் காலை கனவும் கலைகிறது,,,அவள்
எங்கேயோ ,,,,நானிங்கே
பாலைத்தென்றலில் சுழலும் மெல்லிய மணர்காற்றும்
என் விழிகளில் தூரத் தெரிகின்ற அவளின் கானல்
உருவத்திற்கு ஒரு போர்வையாய் காட்சியளிக்கிறது
மூடிய திரைகளில் ஒரு மூடு பனி யாத்திரை
என் நிலவவளோ அதற்கப்பால் மெல்ல உறங்கி
மறைகிறாள்,,,பரவலாய் கிடக்கும் மூடுபனிகளை
விலக்குவதாய் நினைத்து என் விதியை நானே
ஏமாற்றுகிறேன்,,இதற்கு பெயர்தான் பைத்தியக்
காரத்தனமோ,,,???
மின்சாரமணி போல் பற்றவைத்த அனல் தெறிக்கும்
என் விளையாட்டு அனர்த்தத்துளிகள் அவள் மனதை
காயப்படுத்தியதோ என்னவோ,,,
இன்று என்னை வெறுத்தவளாய் அவள் புதைத்த அழகிய
நினைவுகளை பிடிவாதமாக என்னிலிருந்து கொய்து
சென்றுவிட்டாள்,,
அன்று பேசிய வார்த்தைகளை மறந்த என் இதயமோ
இன்றும் ஒரு தண்ணீர் நிரம்பிய வாளியாய்,,அவளின்
நினைவோட்டங்களை நிறுத்திவிடமுடியாமல் ஏனோ
தவித்து துடிக்கிறது
No comments:
Post a Comment