அன்பென்னும்
தீபமேத்தி ஆண்டவனை காட்டினாள்,
ஆட்டினை போல எனை நல்வழியில்
மேய்க்கிறாள்,
பறை போல
இசையுடனே தாலாட்டி உறங்க
வைத்தாள்,
படை அஞ்சா வீரத்துடன்
அவளென்னை வளர்தெடுத்தாள்,
அலுவலகம் செல்லும் முன் என்
காலனியை துடைக்கிறாள்,
அழுக்குகள் போகவே என்
ஆடைகளை துவைக்கிறாள்,
வருணா சிரமம் தான்
அவளென்னை வளர்த்த சிரமம்,
அத்தனை ஜாதியையும் என்
அன்னையிடம் காண்கிறேன்...!
No comments:
Post a Comment