Tuesday, 3 January 2017

மறைக்கப்பட்ட இந்தியாவின் மறுபக்கம்.அணுவும் அறிவியலும்



    உலகிலேயே மிகப்பெரிய இளிச்சவாயன் யார் என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் பதில் கூறலாம், தமிழன், என்று.  எவனோ ஜான் டால்டன் என்ற ஒருவன் அணுவைக் கண்டறிந்தானாம். அப்போது அணுவைப் பிளக்கவே முடியாது என்று கூறியபோது அதற்கு நம்மவர்கள் ஆமாம் சாமி  போட்டார்கள். பின்னர் மேற்கத்திய அதிமேதாவிகள் பலர் இணைந்து அணுவைப் பிளக்க முடியும்; அதன்மூலம் பேராற்றலை வெளிப்படுத்த முடியும் என்று மாற்றிச் சொன்னார்கள். அதற்கும் நம்மவர்கள் ஆமாம் சாமி  போட்டார்கள்.

ஆனால் ஜான் டால்டனுக்கு கிட்டத்தட்ட பதினேழு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த நம் தமிழ் மூதாட்டி அவ்வையார்

"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்"

என்று கூறியதிலிருந்தே அணுவைப் பிளக்க முடியும் என்பது இந்தியாவில் வேத காலம் முதலே அறியப்பட்டிருந்தது என்பது தெரியவில்லையா?

கிரேக்க நாட்டை சேர்ந்த ஹிப்போக்கிரேட்டிஸ் (கி.மு. 400) என்பவர் உடல்நல குறைவு என்பது சாபத்தாலோ பில்லி சூனியத்தாலோ வருவதல்ல; இயல்பான உடல் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்களாலும் சத்து குறைபாட்டாலுமே ஏற்படுகிறது என்று கண்டறிந்தார். அதுதான் மேற்கத்திய உலகில் மருத்துவத்துறையின் துவக்கம். அதனாலேயே மருத்துவ மாணவர்கள், கல்வி முடியும் போது ஹிப்போக்கிரேட்டிஸ் பெயரில் உறுதிமொழி எடுக்கிறார்கள்.

ஆனால் சுஷ்ருதர் (கி.மு. 600) என்ற இந்திய மருத்துவ மேதை தனது மருத்துவக் குறிப்புகளில் (சுஷ்ருத சம்ஹிதா) 1120 நோய்களை பற்றியும் 721 மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய (அடிமுட்டாள்கள்) அதிமேதாவிகள் உடல்நலக் குறைவு எதனால் ஏற்படுகிறது என்று ஒரு முடிவுக்கு வருவதற்கு சுமார் 200 வருடங்களுக்கு முன்பே நோய்களையும் அதற்கான தீர்வுகளையும் அக்கு வேறாக ஆணி வேறாக ஆராய்ந்திருக்கின்றனர் (அக்காலத்து) இந்திய மருத்துவர்கள். இதையெல்லாம் மறந்து ஹிப்போக்கிரேட்டிஸ்தான் மருத்துவத் துறைக்கு தந்தை என்று மேற்கத்திய (அடிமுட்டாள்கள்) அதிமேதாவிகள் கூறினால்... வேறென்ன... அதற்கும் ஆமாம் சாமி  போடுவோம்; அவர் பெயரிலேயே நம் நாட்டு மருத்துவ மாணவர்களும் உறுதிமொழி எடுக்கச் செய்வோம்.

கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் நம் நாட்டில் பிறந்துள்ளதென்றல் நம் பிறப்பும் வரலாறும் எத்தகையதென்பதை யூகிக்கமுடிகிறதல்லவா?
ஆதியில் பகவான் அவதாரமாகிய ´தன்வந்தரி´ மருத்துவ இயலை முதல் முதலாக உருவாக்கியதாக ´வரலாறு´ சொல்கிறது. ´தன்வந்தரி´ என்ற பெயரில் பல மருத்துவ இயலைத் தோற்றுவித்தவர்கள் இருப்பதால் வரலாற்று குழப்பம் ஏற்படுகிறது. இருப்பினும் ´காசிராஜ திவோதாச தன்வந்தரி´ (Kasiraja Divodasa Dhenvantari) ஆயுர் வேதத்தை முறைப்படுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரித்திருக்கிறார். உட்கொள்ளும் மருந்து, குழந்தை மருத்துவம், மனத்தத்துவ இயல், தொண்டை, காது, மூக்கு மற்றும் கண் சிகிச்சை, அறுவை மருத்துவம், நச்சுப் பொருள், இரசாயண இயல், காயகல்ப இயல் (geriatrics) உடலுறுப்புக்களைத் திருத்தியமைக்கும் அறுவை சிகிச்சை என மருத்துவப்பிரிவுகளைக் கண்டு ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் ஆச்சரியத்துடன் புகழ்கின்றனர். சித்த மருத்துவம் தமிழகத்தில் தோன்றிய மருத்துவ சாத்திரம். அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் வகுத்தமுறைகள்.

கி.மு.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் சரகர் (Charaka) இந்திய மருத்துவ உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் "சரகஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.120- அத்தியாயங்கள் கொண்ட சரகஸம்ஹிதையில் மருத்துவக் கோட்பாடுகள், நோய் பரிசீலனை, உடல் அமைப்பு, உடலுறுப்பு இயக்கம், கருவின் தோற்றம் மற்றும் கருவின் வளர்ச்சி, வியாதி குறித்த சிகிச்சை அணுகுமுறைகள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனுக்கு வியாதிகள் எப்படி தோன்றுகின்றது என்பதைக் குறித்து அவரின் ஆராய்ச்சியின் முடிவில், "வியாதிகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் வருகின்றது" என்பதை சரகர் தான் முதல் முதலாக உலகுக்கு சொன்னவர். பிரெஞ்ச் விஞ்ஞானி ´லூயி பாஸ்டி´யருக்கு முன்னாலேயே அதாவது 2.500-ஆண்டுகளுக்கு முன்பே சரகருக்கு தெரிந்திருக்கிறது. சரகர் மனிதனின் உடல் இயக்கம் பற்றி சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் இரத்தத்தில் இருப்பதில்லை. மனித உடல் முழுவதும் இருக்கும் இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டேயிருக்கிறது என்றார். ஆனால்   17-ஆம் நூற்றாண்டில் தான்  ´வில்லியம் ஹார்வி´ என்னும் ஆங்கிலேய விஞ்ஞானி இரத்த சுழற்சியைக் கண்டறிந்தார் என்று ஐரோப்பிய விஞ்ஞானம் சொல்லுவதை கேட்டு நம் வரலாற்றை மறந்துவிட்டு நம் கண்டுபிடிப்புகளுக்கு ஆங்கிலேயனின் பெயரை தலைப்பெழுத்தாய் வைத்துக்கொண்டோம் நாம்.  

சரகருக்கு பிறகு கி.மு.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுஸ்ருதர் "சுஸ்ருத ஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார். "சுஸ்ருத ஸம்ஹிதை"யை இந்திய அரசு பதிப்புத்துறை Scientiste  என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது. சுஸ்ருதர் அறுவை மருத்துவ சிகிச்சையில் நிபுணராக இருந்திருக்கிறார். Scientiste  நூலில் ஓரிடத்தில் சுஸ்ருதர் சொல்கிறார்: "அறுவை மருத்துவனுக்கு தைரியமும், சமயோசித சாமர்த்தியமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அறுவை மருத்துவன் கைகள் வியர்க்கக் கூடாது. கூரிய கத்தி முதலிய மருத்துவ ஆயுதங்களை கை நடுங்காமல் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும். அவனை நம்பி ஒப்படைத்திருக்கும் உயிரை சொந்த மகளை(னை)ப் போன்று கருதவேண்டும். "நெருக்கடி நேரங்களில் அறுவை மருத்துவன் சுபவேளை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. விபத்து அல்லது ஆபத்தான சுழலில் சிக்குண்டு கொண்டுவரப்படும் நோயாளியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற சிந்தனை வரவே கூடாது. எப்படியாவது உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற தீவிர செயல் இருக்க வேண்டும்." என்கிறார் சுஸ்தர்.


   பித்தாகரஸ் தேற்றத்தை யார் உருவாக்கியது என்று கேட்டால் அத்தனை பேரும் சொல்லும் பதில் பித்தாகரஸ் என்ற கிரேக்க கணிதவியலாளர் என்பதுதான். ஆனால், முதன்முதலில் அந்த தேற்றத்தை ஏட்டில் எழுதியவர் புத்தாயனர் (கி.மு. 800) என்ற இந்திய கணித மேதை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  அவரது காலம் பித்தாகரஸின் காலத்திற்கு கிட்டத்தட்ட 230 ஆண்டுகள் முந்தையது. பண்டைக்காலத்தில் உலகப்புகழ் வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்களில் பித்தாகரஸும் ஒருவர். கல்வி முடிந்து அவர் நாட்டிற்குச் சென்று இங்கு கற்ற தேற்றத்தை அங்கு சொல்ல, அதற்கு அவரது நாட்டினர் அவர் பெயரையே வைத்துவிட்டனர். பிறகு அது ஐரோப்பா முழுதும் பரவி, ஆங்கிலேயர்களோடு திரும்பவும் இந்தியாவிற்கே  வந்தது. அந்த தேற்றம் நாம் உருவாக்கியது என்பதையே நாம் அப்போது மறந்து விட்டிருந்த காரணத்தால், அதை பித்தாகரஸ் தேற்றம் என்றே நாமும் ஒப்புக்கொண்டோம். ஆனால் இன்று உண்மை தெரிந்த பின்பும் அதை பித்தாகரஸ் தேற்றம் என்றே குறிப்பிடுவது நமது அடிமைத்தனத்தின் அடையாளமாகவே திகழ்கிறது. 


சரி அணுவை பற்றி இங்கு சொல்ல காரணம் தமிழர்கள் அணுவை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர். அணுவை பற்றி தேடும் போது பல இடங்களில் பாடல்கள் மற்றும் குறிப்புகள் கிடைக்கிறது. சித்த மருத்துவத்தில் மருந்தை அரைக்கும் பொழுது கூட நன்றாக அரைக்கவேண்டும் என்பதற்கு பரம அணுவாக அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.


"இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடு கூடப் படாத சங்க காலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவில் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கிறது. இன்றைய நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கி பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு அறிவியல் பார்வை இலக்கியத்தில் பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.

பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம் லிங்க உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை.
தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை பகுத்து பெயரிட்டது விளங்கும். பல வார்தைகள் இருந்தாலும் மூன்று வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .
கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு இதை விடச்சிறிய அளவு இம்மி.
இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள். வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல் விட்டுவிட்டார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
.


அணுவைப் பற்றி திருமூலர்

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.


அணுவில் அணுவினை ஆதிப் பிரானை - படைப்பாற்றல் அணுவில் அணுவாக உள்ளது, அது தொடக்க காலம் முதல் உள்ளது,

அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு - நுண்ணியதிலும் நுண்ணிய அணுவினை ஆயிரம் பங்கிட்டு,

அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு - அணுவில் அணுவை அவற்றில் ஒன்றை அணுக வல்லோர்க்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அணுகலாம்.

என்றுரைக்கிறார்.

அணுவின் அளவைப் பற்றி திருமூலர் கூறுகையில்

மேவிய சீவன் வடிவது சொல்லிடின் ,
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு,
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால் ,
ஆவியின் கூறு நூறாயிரத்தில் ஒன்றே,


படைப்பாற்றலின் வடிவத்தை சொல்வதென்றால் மாட்டின் தோலிலுள்ள முடியை நூறு பங்காக வெட்டி, வெட்டிய ஒரு பங்கு முடியை ஆயிரம் கூறாக வெட்டி, அக்கூற்றில் ஒரு கூற்றை ஒரு நூறாயிரம் பங்காக வெட்டினால் அதில் கிடைக்கும் ஒரு பங்கிலும் அவர் வடிவத்தை காணலாம் என கூறுகிறார்.

சரி அவரின் கணக்கு படி

1. 1
முடி÷ 100 = 1/100 முடி

2. 1/100
முடி ÷ 1000 = 1/1000 முடி

3. 1/100000
முடி ÷ 100000 முடி = 1/ 10000000000 (0.00000000001)

அப்படியெனில் மாட்டு தோலிலுள்ள முடியின் நீளம் இயல்பாக 5 mm இருக்கும். அதை ஆயிரம் கோடி பங்காக வெட்டினால் கிடைக்கும் ஒரு முடியின் பங்கு. இங்கு ஒரு அணுவின் எடை அல்லது அதன் வடிவத்தின் அளவு என கூறியுள்ளார். இவ்விடம் அணு என்பது நுண்மையானது என்பது திருமூலருக்கு தெரிந்துள்ளது.

இதை போல வள்ளலார் தனது அருட்பாவில் " பிரியும் வகையும்" பிரியாவகையும் தெரிந்தாய் பின்னையே " என அணுவின் அடிப்படை கொள்கையை தெளிவாக கூறுகிறார்.

அண்டப்பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே

ஆசைப்பட்ட தறிந்து தெரிந்தாய் அறிவைத் தூண்டியே

பிண்டத்துயிர்கள் பொருந்தும் வகையும் பிண்டம் தன்னையே.

பிரியும் வகையும் பிரியாவகையும் தெரிந்தாய் பின்னையே

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.

-
திருஅருட்பா

மேலும் திருக்குறளை சிறப்பித்து கூறுமுகமாக இடைக்காட புலவர் "கடுகை துளைத்தேழ் கடலைக் புகட்டி குறுக்கத் தரித்த குறள் " என்று பாடினார்.

இதையே "அணுவைத் துளைத்தேழ் கடலைக் புகட்டி குறுக்கத் தரித்த குறள்"என்றார் ஔவையார். கடுகானாலும் பிளந்துக்கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (ATOM) இருக்கும். அதைப் பிளக்கும் பொது பிரம்மாண்டமான சக்தி உண்டாகும். இதை அணுவியல் படித்தோர் அறிவர். அவ்வணுவையும் பிளக்க முடியும் என்று அறிவியல் நுட்பம் தற்போது நிறைந்துள்ளது.

திருவாசகத்தின் இன்னொரு சான்றையும் உங்கள் முன் வைக்கிறேன்.
அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப் பெருந்தன்மை வளப் பெருங்காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரையலச்
சிறியவாகப் பெரியோன் தெரியின்
திருவாசகம் திருவண்டப்பகுதி [மாணிக்க வாசகர் ]

இதன் சுருக்கமான பொருள் அண்டங்கள் பலவாக உள்ளன அவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தாலோ நூற்றொரு கோடிக்கு மேற்பட்டு நிற்பனவல்லாமல், ஒன்றை விட ஒன்று அளவிட்டறிய முடியாதபடி அழகு பொருந்தியவாகவும் உள்ளது இவ்வண்டங்கள் அணைத்தும் இறைவனின் முன்பு வீட்டின் கூரையில் உள்ள மிகச்சிறிய துவாரத்தின் விழியாக நுழையும் சூரிய கிரணத்தில் தோன்றித் தெரியும் சிறு துகள்களுக்கு ஒப்பாகும் தன்மையதே
திருவள்ளுவர் 2025 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்.
திருமூலர் 4525 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர். 18 சித்தர்களில் முதன்மையானவர். திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார். 3000 ஆண்டுகள் வாழ்ந்த அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர்.
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர்
மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர். பாண்டிநாட்டின் அமைச்சராகவும் இருந்தார். 9ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை, திருவாசகம்,திருக்கோவை இவரால் எழுதப்பட்டவை. 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தவர்.



இவ்வளவு நுட்பமான அணுவில் நிறைந்திருப்பது என்ன ? என்ற வினாவிற்கு தற்போதைய ஆய்வை களமாகக் கொண்டு பார்த்தால், அனுவைப்பிளந்து அவற்றின் அளப்பெரிய ஆற்றலை நம் கண்டும் கேட்டும் ஆண்டுகள் பல கடந்து விட்டன. அணு ஒன்றைப் பிரித்துக் கொண்டு போகும்போது, அதனுள் காணப்படும் உப அணுத்துகள்கள்தான் (Subatomic Particles). அண்டம் தோன்றும் போது எவை உருவாகியனவோ, அவைதான் அணுவுக்குள்ளும் இருக்கின்றன. அணு என்பதைப் பிரிக்க முடியாது என்னும் கருத்து ஆரம்பத்தில் விஞ்ஞானிகளிடையே இருந்திருக்கிறது. ஆனால் இலத்திரன், புரோட்டான், நியூட்ரான் என்று அது பிரிக்கப்பட்டது. தொடர்ந்து நியூட்ரானும், புரோட்டானும் பிரிக்கப்பட்டன. அப்படிப் பிரித்துப் பார்த்த போது, அவை இரண்டுக்குள்ளும் இருந்தவை ஒரேவிதமான குவார்க்குகள் மட்டும்தான். அதாவது பூமியில் உள்ள அனைத்துமே குவார்க்குகளால் உருவானவைதான்.

இவற்றுக்குள் இருக்கும் ஆற்றலை ஆற்றை ஆய்ந்த போது இந்த வெட்டவெளி என்னும் பால்வெளி முழுவதும் நிறைந்துள்ள வெறும் சக்தியில் வெளிப்பாடே அணுவிற்குள்ளும் இருந்தது. அங்கே வெட்டவெளியும் இருந்தது. இந்த அகண்ட வெளியையும் அணுவையும் இணைக்கும் மூலத்தை தேடி அலைந்த விஞ்ஞானிகள் கடந்த 1991 ஆம் ஆண்டு கண்டு கொண்டதே சரக் கோட்பாடு என்கின்ற (String Theory) விதியாகும்.
திருமூலர் இன்னொறு பாடலில் அணுவில் இறைவனும், இறைவனில் அணுவும் இறண்டறக் கலந்து இருப்பதைப் பெறும்பாலோர் உணர்வதில்லை. இணையில்லாத ஈசன் அப்படி பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நிறைந்திக்கிறான்-என்று சொல்கிறார்.

"
அணுவும் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலந்து உணரார்
இணையிலி ஈசன் அவனெங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே"

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அணுவை ரூதர் போர்டு பிளந்து பார்த்த போது உள்ளே எலக்ட்ரான், நியூற்றான், புரோட்டான் துகள்களும் பிரம்மண்டமான வெட்ட வெளியும் இருப்பதக் க்ண்டார். அணுவின் உள்ளே துகள்கள் சில சமயங்களில் துகள்களாகவும், சில சமயங்களில் அலைகளாகவும் பெறிய அளவில் சக்தி வெளிப்பாடுகள் இருப்பதை கண்டார். அதன் பின் அணு ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் உலக நாடுகளில் நடைபெறத் தொடங்கின.

1972-
ம் ஆண்டு ப்ரிஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி "the dance of Shiva : The Hindu view of matter in the light of Morden Physics" ( சிவனின் நடனம் : நவீன பவுதீகத்தின் பாரிவையில் வஸ்துக்களை பற்றிய இந்துக்களின் நோக்கு) என்கிற விஞ்ஞான சம்பந்தப் பட்ட பத்திரிக்கையில் சிவனின் நடனதுக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உல்ல இணக்கத்தப்பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-
ம் ஆண்டு இந்தக்கட்டுறையை விரிவுபடுத்தி "THE TAO OF PHYSICS" என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவை எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

அதில் அவர் குறிப்பிட்டது:- "எப்படி இந்திய சித்தர்கள் , படைப்பைப் பிறிக்க முடியாத , எப்போதுமே செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நடப்பகப் பார்த்தார்களோ , அப்படியே தான் நவீன பவுத்திய விஞ்ஞானம் பிரபஞ்சத்தைக் காண்கிறது"

பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் எங்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (Cosmic Dance) . அதுவே தான் "நடராஜரின் நடனம்" எங்கிரார் காப்ரா.

"
நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே" என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் இந்திய ஆன்மீகமும் நெறுங்கி விட்டிருக்கிறது. அதனால் தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடத்தில் தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்போது செர்ன் (CERN) என்று அழைக்கப்படுகிற அணு ஆரய்ச்சிக்கான ஐரோப்பிய மைதானத்தில் ஆறடி உயர நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அந்த நடராஜர் சிலை அருகே ஒரு பலகையில் சிவன் நடனத்திற்கும், அணுக்களின் நடனத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி காப்ரா எழுதிய மேற்கண்ட வரிகளும் எழுதப்பட்டுள்ளன. அணுப்பிளவிற்கு பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத்தொடங்கினர். இந்தன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித்துறை உருவாகியது.

அடிப்படையான துகள்கள் யாவை? என்று தொடர்ந்து ஆராய முற்பட்டது மொத்தம் 16 துகள்கள் அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்படுள்ளது. சிறு கல், மண்,மேசை, கார், விமானம், பூமி, சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயத்திற்கும் இந்த 16 துகள்கள் தான் அடிப்படை என்று கண்ட போதும் விஞ்ஞானிகளுக்கு ஒரு சந்தேகம் இருநுகொண்டே இருந்தது.

இந்த 16 ஹுகள்கள் மட்டும் பிரபஞ்சத்தத் தீர்மானித்து விட முடியாது என்று அவர்கள் நம்பினர். 16 துகள்களாலேயே எல்லாம் முழுமையடைந்து விட முடியாது என்பதும் இதுவரைக் கண்டறிந்த்தில் ஏதோ ஒன்று விட்டுப்போகிறது என்றும் அவர்கள் எண்ணினர்.
எல்லாவற்றையும் நிர்னயிப்பதும் இயக்குவதுமான இன்னொறு முக்கிய துகள் இருந்துஆல் மட்டுமே எல்லமே சீராகவும் ஒழுங்காகவும் இயங்கமுடியும் என்று நினைத்த விஞ்ஞானிகளில் மிதன்மையானவர் எடின்பரோ பல்கலைக்கலை கழகத்தைச்சேர்ந்த் பீட்டர் ஹெய்ன்ஸ் என்ற விஞ்ஞானி அவர் இதை 1964-ம் ஆண்டிலேயே தெரிவித்திருந்தார்.

அதே சமயத்தில் தான் உண்மை என்று அறிவியல் உலகம் உறுதி செய்தது. கடவுள் துகள் என்கிற "ஹிக்ஸ்போஸன்" எங்கிற உப அணுவை பல்லாண்டு ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்து இருக்கினர்.
ஹிக்ஸ் போஸன் எங்கிற நிறைமிகு துகளின் இருப்பும் அதன் இருப்பினால் மட்டுமே இந்த பிரபஞ்சமும், உயினங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளது என் உறுது செய்யப்பட்டது. ஜட வெஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய், இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த் நிறைமிகு (அதாவது மாஸ் எனப்படும் நிறை காரணமான ) அமைந்துள்ளதால் ஹிக்ஸ் போஸன் துகளை கடவுள் துகள் என்று அழைக்கிறார்கள்.

(
இதில் போஸன் என்ற பாதிப்பெயர் நம் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களுக்கு உரித்தானது. அந்த உப அணு குறித்து அவரும் முன்பே எழுதியிருந்தார் என்பதால் அவருக்கும் சமபங்கு அளித்து இந்தப் பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்போதி "அவனின்றி (சிவனின்றி, ஜீவனின்றி) அணுவும் அசையாது" அன்று நம் முன்னோர்கள் சொல்லியிருப்பதையும், அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடிய "பரமகுருவாய், அணுவில் அசைவாய்" என்ற வரிகளையும் நினைத்துப் பாருங்கள்.

அணுவில் இருந்து அண்டம் வரை அணைத்தையும் இயக்கும் ஆண்டவன் பற்றி நம் முன்னோர் அறிந்து இருந்தர்கள் என்பதை அறியாததன்  விளைவே நாம் நம் முன்னோர்களின்’ கண்டுபிடிப்புகளுக்கு ஆங்கிலேயனின் இனிசியலை போட்டுக்கொண்டோம். 

ஆங்கிலேயன் நம் நாட்டை நம்மிடம் ஒப்படைத்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், ஆங்கிலேய ஆட்சியின் எச்சமாகவே இன்றைய கல்வியும், அதில் கற்பிக்கப்படும் பாடங்களும், நம் நாட்டின் சட்டங்களும் அமைந்துள்ளன. ஆங்கிலேய சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நமது சட்டங்களை மாற்ற வேண்டும் என்று 60 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் சலசலப்பு எழ ஆரம்பித்திருக்கிறது.ஆங்கிலம் கற்பது அவசியமே என்றபோதிலும் தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தையே போற்றுவது மூடத்தனம். உலக அரங்கில் ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது அவனது தேசியமும் மொழியுமே. சீனர்களும் ஜப்பானியர்களும் உலகமே வியக்கும் வண்ணம் முன்னேறியதற்கு, அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பேணி காத்ததே முக்கிய காரணமாகும். அதையே நாம் புறக்கணித்தால் உலகில் நம்மை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதுபிரிட்டனின் முன்னாள் அடிமை நாட்டின் குடிமகன் என்றா?

மேலே சொன்னவை உதாரணங்கள் மட்டுமே. நம் நாட்டின் வரலாற்றை ஆராய்ந்தால் இதுபோல் பல உதாரணங்கள் கிடைக்கும்.இப்படியே நம் பாரம்பரியம் ஒவ்வொன்றையும் நாமே மறந்து, மேற்கத்தியக் கொள்கைகளிலேயே தொற்றிக் கொண்டிருந்தால் நம் நாடு முன்னேறுவது, நமது கனவிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் மட்டுமே நடக்கும். நம் நாடு முன்னேற, நமது நாட்டின் பெருமைமிகு வரலாற்றையும் நமது பாரம்பரியத்தின் மகத்துவத்தையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்றுப் பாடங்களில் அலெக்ஸாண்டர், நெப்போலியன்ஹிட்லர் போன்றவர்களின் புகழை மட்டும் பாடிக் கொண்டிராமல் அசோகர், ஹர்ஷவர்தனர், கரிகாலன், ராஜராஜன்,ராஜேந்திரன், சத்ரபதி சிவாஜி போன்றோரின் பெருமைகளையும் விரிவாக விளக்க வேண்டும். ஆயுர்வேத மேதைகளான சுஷ்ருதர், சரகர் போன்றோர்களைப் பற்றியும் கணித மேதைகளான ஆர்யபட்டா, புத்தாயனா, பாணினி போன்றோர்களைப் பற்றியும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். மேற்க்கத்திய நாடுகளின் கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் ஆமாம் சாமிபோடுவதை நிறுத்த வேண்டும். பள்ளியிலேயே மாணவர்களிடையே நம் சரித்திரத்தையும் பாரம்பரியத்தையும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதை சரிவர செய்தலே நம் நாடு முன்னேற திடமான அஸ்திவாரமாக அது அமையும்.

இவன்
ராசா துரியன்
வழக்கறிஞர்


மறைக்கப்பட்ட இந்தியாவின் மறுபக்கம் ... அணுவும் அறவியலும் 2

அறிவியல் :
*சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் – மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் – கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளை (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.
*இரத்தும் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.
*அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.
வானவியல்:
ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். “ஓ, சூரிய கடவுளே அரை நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்” ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.
*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு.1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.
*வேதங்களின்படி, ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாலில் இருந்து இன்றைய நாளினை குறிக்கிறோம்.”த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே” என்று வரும். இதன்படி
ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்
ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்)
ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000 மகாயுகம்
ஒரு கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.
நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.
கணிதம்:
கி.மு -3000 – நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.
கி.மு 1500 – வேதகாலம் – வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.
கி.மு 200 – பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.
கி.பி 400 – 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.
ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.
நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.
யோகா:
இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.
காஷ்யப ரிஷி – முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.